சந்திரசேகர் குருஜி படுகொலை..!! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி..!!

பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி பட்டப்பகலில்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு ஒருவரை சந்திப்பதற்காக சென்ற சந்திரசேகர குருஜி அங்கு உள்ள வரவேற்பு அறையில் காத்திருந்த போது அங்கிருந்த  ஒருவர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

அப்போது திடீரென ஆயுதங்களை எடுத்து இருவரும் சந்திரசேகர் குருஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில்  நிலைகுலைந்த சந்திரசேகர் குருஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

பின்னர், சந்திரசேகர் குருஜி கொலை செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திரசேகர் குருஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.