ரஷ்ய படைகளின் அடுத்த நகர்வு..!! லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியது ரஷ்யா..!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் லூகாஸ் மாகாணத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. இந்த போரில் உக்கிரன் வெற்றி பெற உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணமான லூகாஸ் மாகாணத்தில் முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றிய நிலையில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லூகாஸ் மாகாணத்தை முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் எல்லையில் உள்ள ரஷ்யாவின் பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 வீடுகள் மற்றும் 21 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.