ஆந்திராவில் பரபரப்பு.!! பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்கள்..!!!

ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டதை அடுத்து கருப்பு பலூன்களை வீசிய காங்கிரஸ் கட்சியினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடியின் ஆந்திரப் பயணத்தின் போது கன்னவரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு மீறல் நடந்ததாகக் கூறப்படுவதை மறுத்த போலீசார், பிரதமர் மோடி புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விமான நிலையத்திலிருந்து 4 கி மீ தொலைவில் சில பலூன்கள் விடப்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஒருவர் தப்பியோடி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.பிரதமர் மோடியை கண்டித்து நாடு முழுவதும் கருப்பு பலூன்களை காட்டி போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் வருகைக்கு சற்று முன்பு சுங்கதர பத்மஸ்ரீ, பார்வதி, கிஷோர் ஆகிய மூன்று பேர் கருப்பு பலூன்களுடன் விமான நிலையத்தை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது. உடனே போலீசார் அவர்களை அடையாளம் கண்டு  மூவரையும் கைது செய்து உள்ளனர்.  

இதில் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜீவ் ரத்தன் மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோர் கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி சில கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.  இருப்பினும், அவர்கள் பலூன்களை விடுவதற்குள், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் விமான நிலையத்தை விட்டு வெளியேறி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.