முடிவுக்கு வராத ரஷ்யா – உக்ரைன் போர்..!! உக்ரைன் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்..!

ரஷ்யா – உக்ரைன் போர் ஆனது நான்கு மாதங்களுக்கு மேலாக  தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் நான்கு மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 

ரஷ்ய படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது.

அதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில் ரஷ்ய ராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள் இருவர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் உக்ரைன் போர் தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மீண்டும் ஒருமுறை விளாடிமிர் புதினிடம் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.