ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் கைது..!!

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 50 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவாசிய பொருள்களான பால், அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக ஒரு விசைப்படகில், ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 50 பேரை அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவிற்கு தப்ப முயற்சி: 34 தமிழ் அகதிகள் சென்னையில்  கைது | 34 Sri Lankan Tamil refugees were arrested in Chennai - Tamil  Oneindia

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை மேல் நடவடிக்கைக்காக திருகோணமலை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில், மக்கள் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனால் இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி சரியான பாடில்லை.

Leave a Reply

Your email address will not be published.