அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு..!! திட்டத்தை விரைந்து முடிக்க யோகி ஆதித்யநாத் தீவிரம்..!

உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் யோகி ஆதித்யநாத் மாநில முதல்வர் பதவியை 2வது முறையாக பொறுப்பேற்றார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்களை வர உள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி  முடிக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக கடந்த மார்ச் 25ம் தேதி பதவியேற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாட்கள், 6 மாதங்கள், ஓராண்டு என 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஜனநாயகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்!" -  யோகி ஆதித்யநாத் | Yogi Adityanath says the Opposition must work in tandem  with the government to ...

இந்நிலையில், ஜூலை 5 ம் தேதியுடன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு இல்லத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கூட்டத்தில் முதல் 100 நாட்களில் நிறைவேற்ற வகுக்கப்பட்ட திட்டங்களை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *