இலங்கைக்கு உதவும் அமெரிக்கா..!! அதிபருக்கான அதிகாரங்கள் குறைய வாய்ப்பு..!!

நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை அதிகரிக்கக்கூடிய அரசியல் சாசன சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இலங்கையில் கடந்த 2015 ஆம் வருடத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு கீழ் அதிபர் இருக்கும் வகையிலான அரசியல் சாசனத்தின் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தார். 

ஆனால், 2020 ஆம் வருடத்தில் அதிபரான கோத்தபய ராஜபக்சே அதை ரத்து செய்தார். மேலும், அதிபருக்கான அதிகாரங்களை அதிகரிக்கக்கூடிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 

இந்நிலையில், இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்ச தான் காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Sri Lanka on the brink of bankruptcy after worst economic crisis in history  - The Week

எனவே, அதிபருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவரை இயங்க வைக்கும் அரசியல் சாசனத்தின் 21ஆம் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சி தாக்கல் செய்திருந்தது.

தற்போது இலங்கையின் மந்திரிசபை குழுவானது, இந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே, விரைவாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அமெரிக்கா வழங்குவதாக அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *