இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறுவது கடினம் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்போரில் உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு பெர்லினில் தொடங்கியது.இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக அதிகமாக பொருளாதார தடைகளை விதிக்கவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியை தடை செய்ய ஜி7 நாடுகள் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டின் நிறைவில், ஜி-7 நாடுகள் உக்ரைனுக்கு இறுதிவரை ஆதரவளிக்கும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை தேவைப்படும் வரை மற்றும் தேவையான தீவிரத்துடன் பராமரிக்க உறுதியளித்துள்ளது.
மேலும் உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறக் கூடாது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியா உட்பட சில நாடுகளுடன் ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.