ஒன்றிய அரசு அதிரடி..!! ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..!! 

நாட்டில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இதைக் கண்காணிக்க நாடு முழுவதும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு  வேண்டுகோள் விடுத்தார்.

An Overview of Single Use Plastic Ban in India - Copbiz

தற்போது அதை தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்த தடை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் இந்த தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் படி, அபராதம், பொருட்கள் பறிமுதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையே மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பிளாஸ்டிக் அல்லது 100 மைக்ரோன்களுக்கு குறைவாக உள்ள அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *