ரஷ்யாவின் தொடர் தாக்குதல்..!! கண்டனம் தெரிவித்த ஜி7 அமைப்பு..!!

உக்ரைன்- ரஷ்யா போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்  உக்ரைனின் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பகுதியில் ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 59 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உக்ரைனின் மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ளனர். அதை தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடந்த தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Russian missile kills at least 16 civilians, injures more than 40 in strike  on crowded shopping centre in Ukraine - The Globe and Mail

இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது தாக்குதல் நடந்த போது மாலில் ஏறக்குறைய 1,000 பேர் இருந்தார். இதில் எத்தனை பேர் ஏவுகணை தாக்குதலில் பலியாகி இருப்பார்கள் என தெரியவில்லை என கூறினார். இந்த நிகழ்வுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே உக்ரைனில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அருவருக்கத்தக்க இந்த செயல் மிகப்பெரிய போர் குற்றமாகும் என்று ஜி7 அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *