திடீர் ராஜினாமா… அதிமுக வரலாற்றிலேயே முதன் முறை…!
மணப்பாறை நகராட்சி அதிமுக நகர்மன்ற தலைவர் திடீரென பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா கடிதத்தை ஆணையரிடம் வழங்கினார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 11 இடங்களிலும், அதிமுக வினர் 11 பேரும் சுயேட்டைசகள் 5 பேர் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினராகினர். பின்னர் மார்ச் 4ம் தேதி நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் தி.மு.க சார்பில் கீதா.ஆ.மைக்கேல்ராஜ் போட்டியிட்டார். இதே போல் அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் என்பவரும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் 15 வாக்குகளும், தி.மு.க 12 வாக்குகளும் பெற்றனர்.
அதிக வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் சுதா பாஸ்கரன் வெற்றி பெற்று நகர்மன்ற தலைவராக தேர்வானர். இந்நிலையில் 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவைச் சேர்ந்தவர் நகர்மன்ற தலைவரானார். அதன் பின்னர் நடந்த நகர்மன்ற துணைத் தலைவர், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், சுயேட்சை கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் 3முறை ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் ,தலைவர் பதவியேற்று சுமார் 3 மாதங்கள் கடந்தும் இதுவரை ஒரு நகர்மன்ற கூட்டம் கூட நடைபெறவில்லை.
இந்நிலையில் தான் இன்று மதியம் நகர்மன்ற தலைவர் சுதா பாஸ்கரன் சொந்த காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்ததை நகராட்சி ஆணயர் சியாமளாவிடம் வழங்கினார். ஆணையர் சியாமளா ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கெள்வதாக தெரிவித்தார்.
56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவைச் சேர்ந்தவர் நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஆணையரிடம் ராஜினாமா கடிதம் வழங்கபியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.