அக்னிபாத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மேகாலயா ஆளுநர் சத்யபால்

அக்னிபாத் திட்டம் ராணுவத்தின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு தெரிவித்து நாடு முழுவதும்  இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் பேசிய மேகாலயா ஆளுநர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் இது குறித்து பேசுகையில்  அக்னிபாத் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கவுரவத்துக்கு கெட்ட பெயரை வாங்கித் தரக்கூடியது. 

Agneepath uproar: Two dozen FIRs in Bihar more than 100 youth arrested  alert issued for tomorrow - अग्निपथ बवालः बिहार में दो दर्जन एफआईआर, 100 से  ज्यादा युवा गिरफ्तार, कल के लिए अलर्ट ...

இதை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மதிப்பு குறைந்துவிடும்.மேலும் இந்த திட்டத்தால் திருமணத்துக்கு பெண் கிடைப்பது கடினம் என்றார். 4 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்யும் வீரருக்கு யார்தான் பெண் கொடுப்பார்கள் என கேள்வி எழுப்பினர். 

ஒன்றிய அரசு பழைய நடைமுறைகளின் படி ராணுவ ஆள்சேர்ப்பு முறையை  நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரின் கருத்து இப்படி இருக்க மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *