கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா..!!

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ரஷ்யா முதல் முறையாக தனது வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதை எதிர்க்கும் விதமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளது. பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உலக நிதிய அமைப்பிலிருந்து ரஷ்யா பிளவுபட்டது.  இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை ரஷ்யா சந்தித்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையே 3-ம் முறையாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை? | Russia,  Ukraine To Hold Third Round Of Talks On Monday | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online ...

இந்த நிலையில் கடந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் ரஷ்யா தனது வெளிநாட்டு நாணய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. அதாவது  ரஷ்யா சுமார் 40 பில்லியன் டாலர் வெளிநாட்டுப் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கியுள்ளது. அதில் பாதி வெளிநாட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியது.

ரஷ்யாவின் கையிருப்பில் உள்ள டாலர் உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க கையிருப்பு வெளிநாடுகளில் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மறுப்பு தெரிவித்த ரஷ்ய நிதி அமைச்சர் சிலுவானோவ் ரஷ்யர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த விளைவும் ஏற்படாது. எங்களிடம் பணம் உள்ளது, கடன் தொகையை செலுத்த தயாராக உள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *