புதுச்சேரியில் யார் முதலமைச்சர் என தெரியவில்லை – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கி விட்டார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார் .

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது  தெலுங்கானாவில் தமிழிசைக்கு வேலை இல்லையா, ஏன் முழு நேரமும் புதுச்சேரியில் அவர் இருக்கிறார் என கோபம் கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில் தனக்கான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்து விட்டார். அமைச்சர்களின் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

புதுச்சேரியில் ஆட்சி செய்வது பொம்மை.. பொம்மலாட்டத்தை நடத்துவது தமிழிசை..  நாராயனசாமி ரகிட ரகிட!

ஆனால், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். அதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி நடத்தி இருக்க வேண்டும்.

ரங்கசாமி ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, புதுச்சேரியில் வெளிநாட்டு மதுபான ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க கோடிக்கணக்கில் லட்சம் வழங்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு நல்ல காலம் வருகிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சொல்லி வருகிறார். ஆனால் ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை என அடுக்காக தந்து கண்டதை தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *