தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி – தருண் சவுக்
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தான் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் தெரிவித்துள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தேதிகளில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளருமான தருண் சவுக், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இப்போது தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து தேசிய செயற்குழுவில் ஆலோசிக்கப்படும் என்றார்.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.
தேசிய செயற்குழுவின் முடிவில் ஜூலை 3ம் தேதி ஹைதராபாத்தில் பரேட் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது பாஜகதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.