குஜராத் வன்முறை..!! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!!

2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் தொடர்பான வழக்கில் பிரதமர்  நரேந்திர மோடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக  வன்முறைகள் நடைபெற்றது.  இந்த  வன்முறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 2002-ம் ஆண்டு வன்முறையில் படுகொலை செய்யப்பட்டவர் ஜாஃப்ரி. அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

'This Is A Case Where The Majesty Of Law Has Been Deeply Injured': Kapil  Sibal Concludes His Arguments Before Supreme Court In Gujarat Riots-Zakia  Jafri Matter

குஜராத் படுகொலைகள் தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இவ் விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், குஜராத் வன்முறைகள் தொடர்பாக அப்போதைய மாநில முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட 64 பேரை விடுதலை செய்தது.

மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிராக அகமதாபாத் கீழ் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் படுகொலை செய்யப்பட்ட காங். எம்.பி. ஜாஃப்ரி மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தற்போது இந்த வழக்கை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *