பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு..!!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் காண்கிறார்.இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று முர்மு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை மாநிலங்களவை செயலாளர் மற்றும்  தேர்தல் அதிகாரி பிரமோத் சந்திர மோடி பெற்றுக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் வாக்களிக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்தம் 4,033 பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்பது குறிப்பித்தக்கது.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 11.43 சதவீத வாக்குகளை வைத்துள்ள எந்த அணியிலும் சாராத இந்த 4 கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *