திக் திக் நிமிடம்..!! “லேண்டிங் கியர் பழுது”  தீப்பிடித்து எரிந்த விமானம்..!

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த ரெட் ஏர் பயணிகள் விமானம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது எம் டி 82 ஜெல் லைனர் வகை விமானத்தின் முன்பக்க லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டதால் விமானம் ஓடுதளத்தில் லேசாக மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு படையினர், ரசாயன நுரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 126 பயணிகள் உயிர் தப்பினர். 

மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்தது... 126 பயணிகள்  உயிர் தப்பினர்!! | Dinakaran

இந்த விபத்தில் லேசான தீக்காயம் அடைந்த 3 பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து மியாமி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *