மகாராஷ்டிரா முதல்வர், ஆளுநரை தாக்கிய கொரோனா தொற்று..!!
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.
இதனால் மகாராஷ்டிரா சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச முடியவில்லை. அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அதேபோல், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி க்கு கொரோனா சோதனைக்குப் பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து தங்கள் ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.