உடலையும், மனதையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனைக்கு அருகில் இன்று நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த 8-வது சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

யோகா குறித்து மேலும் அவர் பேசுகையில் நமக்கு அமைதியைத் தருகிறது யோகாவிலிருந்து வரும் அமைதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல நமது நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டு வருகிறது.

யோகா எந்தவொரு தனிநபருக்கும் மட்டுமல்ல, முழு மனித குலத்திற்கும்  பொருந்தும். அதனால்தான் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் யோகா மனித குலத்திற்கான என்று பெயரிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 

யோகா நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியைக் கொண்டுவருகிறது" - சர்வதேச யோகா  தினத்தில் பிரதமர் மோடி | Yoga is not only for any individual but for the  entire humanity says modi

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் யோகா என்பது மனித குலத்திற்கு இந்தியா அளித்த பரிசு இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை, மனம், உடல் மற்றும் ஆன்மாவைச் சமநிலைப்படுத்துகிறது. 

இந்த எட்டாவது சர்வதேச யோகா தினம் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் மாபெரும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *