அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு..!!  முடங்கியது டெல்லி போக்குவரத்து..!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது. அக்னிபாத் திட்டத்தில்  சேர 17.5 வயதில் இருந்து 21 வயதிற்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ள அக்னி பாதை  திட்டத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13ம் தேதி அறிமுகம் செய்தார்.

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு இளைஞர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளது. பீகார்,  உத்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலம் முழுவதும் 12 ரயில்களுக்கு மேலாக தீ வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அக்னிபாத்  திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் டெல்லிக்கு வர முடியாமல் முடங்கி வருகிறது. டெல்லி – நொய்டா எல்லையில் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அக்னிபாத்  திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் நடைபெறுவதால் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே அக்னிபாத்  திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் ஒட்டி ஜார்க்கண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும் வட மாநிலங்களில் ரயில் நிலையங்கள், ராணுவ பணிக்கான பயிற்சி மையங்கள் போன்றவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *