கர்நாடகாவில் இந்தி பதாகைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!!  கண்டனம் தெரிவித்த கன்னட அமைப்பினர்..!!!

கர்நாடகாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக  வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த இந்தி எழுத்துக்களை சில கன்னட அமைப்பினர் தார்பூசி அழித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்ட இந்தி பேனர்களும் கன்னட அமைப்பினரால் அகற்றப்பட்டது.

பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ரூ.27000 கோடி மதிப்பிலான பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வருகிறார்.பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், பெங்களூரு யஷ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடகாவில் பதற்றம்- பிரதமர் மோடியை வரவேற்கும் பேனர்களில் இந்தி எழுத்துகள்  தார்பூசி அழிப்பு! | Kannada activists remove Hindi in PM Modi Welcome  banners - Tamil Oneindia

அதன் பின் மைசூரில் பிரதமரின் யோகா நிகழ்ச்சியுடன் நாடு முழுவதும் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியை வரவேற்று பெங்களூரு, மைசூரு நகரங்களில் இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் இந்தி எதற்கு என்ற முழக்கத்துடன் சில கன்னட அமைப்பினர் பிரதமர் மோடியை வரவேற்கும் பேனர்களில் இருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்தனர். பல இடங்களில் பிரதமர் மோடியை வரவேற்கும் இந்தி பேனர்கள் அகற்றப்பட்டன.

மேலும் பெங்களூருவில் இந்தி பதாகைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர்கள் முழக்கமிட்டனர். இந்நிலையில் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *