பள்ளிகளுக்கு விடுமுறை இலங்கை அரசு அதிரடி..!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின் தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் அதிகரித்து செல்வதால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.  இதனிடையே, இந்த சூழ்நிலையை கையாள முடியாமல் இலங்கை அரசும் தவித்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிப்பொருட்கள் நிலையங்கள் மூடப்பட்டது.

Sri Lanka announces shut-down of schools from next week amid fuel crisis |  World News - Hindustan Times

இந்நிலையில் எரிபொருள் பிரச்சனை மற்றும் மின்தட்டுப்பாடு உள்ளிட்ட அடுக்கடுக்கான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இலங்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பொது போக்குவரத்து 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் காலத்தில் ரயில் சேவையும் விரைவில் நிறுத்தப்படும் என ரயில்வே துறையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *