என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் – ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் இளைஞர்களுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் 52 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இந்திய இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். இந்த நேரத்தில் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் நிற்க வேண்டும். எனது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல  மாநிலங்களில் 200க்கும் அதிகமான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Agnipath Scheme: Withdraw the Agnipath scheme immediately, apologize to the  youth, Prime Minister and Defense Minister: Congress | The Indian Nation

இதனிடையே அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்திய மக்களுக்கு என்ன தேவை என்பதை பிரதமர் எப்போதும் புரிந்து கொள்வதில்லை. ஏனென்றால் அவருடைய நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் அவர் கேட்பதில்லை என விமர்சித்துள்ளார்.

தற்போது இளைஞர்களுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலை உருவாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *