அமெரிக்காவில் ஆறு மாத குழந்தைகளுக்கும் இனி கொரோனா தடுப்பூசி..!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி போட அமெரிக்கா மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் இருப்பதால் அவர்களை கொரோனா தொற்றில் இருந்து  காப்பாற்ற தடுப்பூசி போட வேண்டும் என அமெரிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

இதற்கு முன்பு வரை இந்த வயதினருக்கு பைசர் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்நிலையில் தற்போது  மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி போட செலுத்தும் பணிகள் வருகிற 20-ந் தேதி அல்லது 21-ந் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி  இல்லாமல் எப்படி சரி செய்யலாம்! | coronavirus vaccine got your vaccine shot  heres how to manage ...

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒரு சில மாதங்கள் தடுப்பூசியை செலுத்தும் பணியை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளுக்கு, மாகாணங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்டவை முன்பே ஆர்டர் கொடுத்து விட்டன.

ஆர் என் ஏ-வை அடிப்படையாகக் கொண்ட இந்த இரு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தக் கூடியவை என கூறப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் மற்றும் மரணம் போன்ற மோசமான பாதிப்புகளை குறைக்கும் கூறப்படுகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *