முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல்..!! இரண்டு நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து..!!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அப்பாக்களின் தினம் இன்று உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தி இருக்கச் செய்து, அறிவு – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் அவர் தந்தையார். தந்தையர் தினத்தில் தந்தையை நினைத்து வணங்குகிறேன். எல்லா தந்தையரையும் வாழ்த்துகிறேன் என முதல்வர் கூறியுள்ளார்