உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்   – பிரதமர் போரிஸ் ஜான்சன்

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து 100 நாட்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவிகளை நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறக் கூடிய சூழலால், நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்ட கால சேதம் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

UK Prime Minister (@10DowningStreet) / Twitter

அதனை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே நாட்டில் இருந்து கிளம்பும் முயற்சித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது என்று இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது உக்ரைன் கோரி நிலைமை பற்றி இருவரும் ஆலோசனை செய்தனர். இதுபற்றி ஜான்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் உக்ரைனின் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுடன் துணை நிற்போம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *