சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் 11 வயது சிறுவன் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார் . 

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.  

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 60 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் 40 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். 

மேலும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி வந்தனர். இந்த நிலையில் கிணற்றுக்குள் சிறுவன் இருக்கும் பகுதியில் தொடர்ந்து நீர் சுரந்து கொண்ட நிலையில் சிறிய வாளியின் மூலம் தண்ணீரை சிறுவன் மேலே அனுப்பி வந்தான் . 

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்- 4 நாள் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன்  மீட்பு | 10 yr old Rahul successfully rescued after over 100 hours of  operation

மீட்பு ரோபோ ஒன்றும் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் சிறுவனை உயிருடன் மீட்டு விடலாம் என்ற மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் 60 அடி ஆழத்தில் இருந்து நேற்று இரவில் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சிறுவன்  உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *