சூடானில் தொடரும் வன்முறை..!! பலி எண்ணிக்கை உயரும் என ஐ.நா. எச்சரிக்கை

சூடானில் இரண்டு இனக் குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். சூடான் நாட்டின் பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் சூடானில் ஆட்சியை கைபற்றியது. இதை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தது. ஆனால் தற்போது வரை ராணுவமே சூடான் அரசை நிர்வகித்து வருகிறது.

இதையடுத்து அங்கு அவ்வப்போது இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல் வலுத்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாகவே மோதல்கள் அதிகரித்துள்ளன.

UN 'appalled' as death toll in Sudan's Darfur climbs to 213

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டார்ஃபூரில் கடந்த ஒரு வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது. மோதல் காரணமாக சுமார் 5,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

வன்முறை காரணமாக 20 கிராமங்கள் தீக்கிரையாகி உள்ளன. இதுவரை 100 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறை உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் நிறைய உயிர்கள் பலியாக நேரிடும் என எச்சரித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *