வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவர் – ராகுல் காந்தி
மத்திய அரசின் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பிரதமர் நரேந்திர மோடி மனித வளம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் மத்திய அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மிஷன் மோடு என்ற பெயரில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருந்தார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர். அது இப்போது 10 லட்சமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்