தேசிய அளவில் புதிய கட்சி..!! குழப்பத்தில் தெலுங்கானா முதலமைச்சர்..!!

இந்திய அரசியலில் மேலும் ஒரு பரபரப்பாக தேசிய அளவில் புதிய கட்சியை தொடங்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் நாடு தழுவிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இது பலன் கிடைக்காத சூழலில், பாரதிய ராஷ்ட்ர சமிதி என்ற பெயரில் தேசியக் கட்சி ஒன்றை புதிதாக தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் முடிவு |  Telangana CM KCR not to receive PM Modi on Hyderabad visit, nominates  minister

ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேசியக்கட்சி திட்டம் முழு வடிவம் பெறும் எனவும் ஜூன் இறுதியில் டெல்லியில் சந்திரசேகர ராவ் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மோடி குறித்து விமர்சனம் பேசியவர்  தேசிய அரசியலில் டெல்லி கோட்டையை உடைக்க தயார். தேசிய அளவில் எந்த ஒரு திட்டத்தையும் தெலங்கானாவுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. நீங்கள் தெலுங்கானா வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *