நேஷனல் ஹெரால்டு வழக்கு..!!  அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணி..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் டெல்லி அக்பர் சாலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை சுற்றி டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணி..!! - Dinakaran

காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்த காவல்துறையினர்  நேற்று  தடை உத்தரவு பிறப்பித்தனர். இருந்த போதிலும் இன்று காலையில் ராகுலுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பாஜக இந்தப் போராட்டம்  குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது.

எதற்கு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாடகம். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டியது  அனைவரின் கடமை அதை புறக்கணிக்க எதற்கு இப்படி இது என்ன வகையான சத்தியாகிரகம் போராட்டம்.

Rahul Gandhi set to appear before ED today | India News – India TV

இந்தப் பிரச்சினை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்தது. இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *