கிராமம் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும் – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கிராம உள்ளாட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆன நிலையில்  உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக ரீதியில் மேம்படுத்தப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது.

அண்மையில் ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது இதற்கு சான்று ஆகும்.  பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கொண்டு செல்வதில் கிராம உள்ளாட்சி தலைவர்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அதேபோல் இனி வரும் நாட்களில் நீரை முறையாக சேமித்துப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் - கிராமசபை  கூட்டத்தில் கலெக்டர் பேச்சு | Rainwater harvesting project People should  implement ...

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் சேகரிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்றார். மழைநீர் சேகரிப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவது கிராம உள்ளாட்சி தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். தகுதியான மக்கள் அனைவரும் அரசின் நலத் திட்டங்களின் பலனடைய வேண்டும்.

இதை கிராம உள்ளாட்சி தலைவர்கள் திறம்பட செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள தகுதியான நபா்கள் அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்களின் பலன்கள் சென்றடைந்து விட்டால் அந்தக் கிராமம் முழுவதும் வளர்ச்சி அடையும். கிராமம்  வளர்ச்சி அடைந்தால் இந்த நாடு வளர்ச்சி அடையும் என  கூறியுள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *