ஞான வாபி மசூதி விவகாரம்..!! நீதிபதிக்கு வந்த மிரட்டல் கடிதம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள இஸ்லாமிய ஞான வாபி மசூதியின்  சுவரில் உள்ள இந்து மத கடவுள்  இருப்பதாக அதை வணங்க அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதியில் மூன்று நாட்கள் ஆய்வு நடத்தியது.

நேரம் வந்துவிட்டது! வரலாறு முக்கியம்.." ஞானவாபி மசூதி விவகாரம்.. ஆர்எஸ்எஸ்  பரபர கருத்து | "Time Has Come To Put Historical Facts...": RSS On Gyanvapi  Mosque Case - Tamil Oneindia

இந்த ஆய்வின் போது ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. ஞான வாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்  வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இஸ்லாமிய ஆகாஷ் இயக்கத்தைச் சேர்ந்த காசிஃப் அஹ்மத் சித்திக் என்பவர் எழுதிய இந்த கடிதத்தில் நீங்கள் ஒரு இந்து மத வழிபாட்டாளர் ஒரு இந்து நீதிபதியிடம் இருந்து எந்த ஒரு இஸ்லாமியரும் நீதியை எதிர்பார்க்க முடியாது என எழுதியுள்ளார். நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *