இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்..!  உத்தரப்பிரதேசத்தில் நிலவும் பதற்றம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பாஜக நிர்வாகி ஒருவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் முஹம்மது நபியை பற்றி அவதூறாக பேசியதாக  இந்த சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஒரு பிரிவினர் ஆவேசம் அடைந்த மற்றவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

இந்த கலவரத்தால் கான்பூரில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி அவர்கள் போராட்டம் நடத்தினர். மற்றொரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்தது. போலீசார் தலையிட்டு மோதலில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தி கலைத்தனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம்: மங்களூருவில் போலீஸ்  துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி | CAA Protest: Mangaluru Police fire shots in  air - Tamil Oneindia

பின்னர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை விரட்டியடித்தனர். மோதலில் இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதால் சாலை முழுவதும் கலவர  பூமியாக மாறியுள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கான்பூர் வந்திருந்த நிலையில் இந்த மோதல் போலீசாருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *