அடுத்த 5 நாட்களுக்கு இதுதான் நிலை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Warning

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05.06.2022, 06.06.2022, 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பெரம்பலூர் (பெரம்பலூர்) 4, கெட்டி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 3, அம்முண்டி (வேலூர்), வேப்பூர் (கடலூர்), கோத்தகிரி (நீலகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), எடப்பாடி (சேலம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, சிற்றாறு (கன்னியாகுமரி), ஆண்டிப்பட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சி), குப்பணம்பட்டி (மதுரை), கரையூர் (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை) தலா பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *