அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்..!!

அமெரிக்க நாட்டின் நெப்ராஸ்காவில் ஒமாஹா என்ற நகரில் உள்ள ஒரு ரசாயண தொழிற்சாலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாத நிலையில் இந்த தீ விபத்து பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ரசாயன ஆலைக்குள் புரோபேன் என்ற வேதிப்பொருள் தொட்டிகள் மற்றும் பிற எரியக்கூடிய இரசாயனங்கள் இருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடுமையான  இந்த தீ விபத்தை  மூன்று அலாரம் தீ விபத்து என்று வகைப்படுத்துகின்றனர். இன்னும் தீ விபத்துக்கான காரணம் குறித்து  சரியான தகவல் தெரியவில்லை என கூறுகின்றனர். இன்னும் இந்த தீ விபத்து குறையாத நிலையில்  தீயணைக்கும் பணி இன்னும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 7 குழந்தைகள் உள்பட 13  பேர் உயிரிழப்பு | A fire in the United States has left 13 people dead  including seven children ...

ரசாயன ஆலையில் இருந்து எழும்புகின்ற இந்த புகையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத சூழலில் அங்கிருக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில்  அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை பாதுகாப்பான முறையில்  காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தி வருகின்றன.

இந்த தொழிற்சாலையில் கான்கிரீட் வேலைக்கு உதவும் இரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தால் கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு  அப்பாலும் தென்பட்டதால் இந்த காட்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *