நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 

மக்கள் நலன் என்று வந்துவிட்டால் நான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்துவோம் என கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் புருலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு  கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் தான் கைது செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதை செய்தால்தான் மாநிலங்களின் வருமானம் உயரும்” - ஒன்றிய பாஜக அரசுக்கு  பொருளாதார நிபுணர்களின் அறிவுரை!

தவறு செய்யும் பாஜகவினரை எப்போதும் கைது செய்யாதா என கேட்டுள்ளனர்.பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறினார்.

2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *