ரஷ்ய அதிபர் புடினை தாக்கிய கொடிய நோய்..! மூன்று ஆண்டுகள் கெடு கொடுத்த மருத்துவர்கள்..!

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் இன்னமும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ முடியும் என   மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக அவர் அண்மையில் ரத்தப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார் என்றும் அதனால் அவரின் அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. 

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புற்றுநோயுடன்  போராடுகிறாரா?.. மேசையை இறுகப் பிடித்து அமர்ந்திருப்பதால் சந்தேகம் ...

இந்த தகவல் உறுதிப்படுத்தும் விதமாக அதிபர் புதினுடன் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய் காணொலி காட்சி மூலம் போர் குறித்து ஆலோசனை நடத்திய காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் புதின் மிக சோர்வுடன் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் அவர் மூன்று  ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அவரின் உடல்நிலை சரியில்லை என்றும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார் என்றும் அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் எழுதி தர வேண்டியுள்ளது என்றார். இந்த சூழலில் தான் உக்ரைன் மீதான தாக்குதல் ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *