நாட்டு மக்களுக்காக என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளேன் – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேசம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடும்ப அரசியலால் நாடு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாகக் கூறினார்.
ஆனால் எங்களுடைய ஆட்சியில் இது போன்ற கொடுமைகள் நடக்கவில்லை என்றார். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த உள்ளதாகவும் பேசினார்.
கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமராக தன்னை உணர்வதாகவும், மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாகவே தன்னை உணர்வதாக கூறினார். தன் வாழ்க்கையில் எல்லாவுமாக இருக்கும் 130 கோடி மக்களின் சேவகனாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது அனைவரையும் ஈர்த்துள்ளது.