இந்த 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள்; அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு!
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது: தமிழகத்தில் புதிதாக ராமநாதபுரம் சிவகங்கை திருப்பத்தூர் உட்பட 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
சிகரெட் தயாரிக்க 60 கோடி மரம் வெட்டப்பட்டுகிறது 20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக
3500 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும். பான்பராக், குட்கா விற்க கர்நாடகாவில் தடை இல்லை என்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறி வண்டியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து இன்று மாலையோ அல்லது நாளை காலையோ நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளேன் என தெரிவித்தார்.