பெசன்ட் நகர் பீச்சை இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க… அப்படியே இந்த APP-யையும் தெரிஞ்சிக்கோங்க!

Ma su

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் மணற் சிற்பத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக அமைக்கப்பட்ட மணற் சிற்பத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையிக் திறந்து வைத்தார்.

புகையிலை பழக்கத்தில் வெளிவருவதற்கான QuitTobacco என்ற செயலியையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன் :- 1987 ஆம் ஆண்டு மே 31 முதல் புகையிலை ஒழிப்பு தினம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் உலக நாடுகள் செய்து வருகின்றன.

புகையிலை பழக்கத்தில் இருந்து மீண்டு வர Quit Tobacco என்ற செயலியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது என கூறினார். அடையார் புற்றுநோய் மருத்துவமனை புகையிலை ஒழிப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து பல்வேறு வகையில் ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகின்றனது என்றும் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்கள் இதுபோன்று மேற்கொள்ளும் முயற்சி பெரிதளவில் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியவர்கள் வெளிவர ஊக்குவிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *