கோவில் பெயரை சொல்லி வசூல் வேட்டை… கார்த்திக் கோபிநாத்தை அலேக்கா தூக்கிய போலீஸ்!

Karthick gopinath

கோவில் புனரமைப்பு செய்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்த் கார்த்திக் கோபிநாத் என்பவரை கைது செய்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள 2 கோவில்களை புனரமைப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் என்பதால் முறையாக அனுமதி வாங்காமல் பண மோசடி செய்ததாக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து இருந்தார்.புகார் தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடியில் உள்ள வங்கி கணக்கு ஒன்றின் மூலமாக கார்த்திக் கோபிநாத் பணத்தை வசூலித்தது தெரிய வந்ததால் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கார்த்திக் கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்” என்று ஆவடி காவல் ஆணையரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *