கல்வி எங்கள் உரிமை..! ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..!!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் தலிபான்கள் வந்த பிறகு இதற்கு முன் இருத்தது போல் இருக்காது என கூறியது. அதிகாரத்தில் இருந்த போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருக்காது என உறுதியளித்தனர்.
ஆனால் பல கட்டுப்பாடுகளை தலிபான் ஆட்சி விதித்தது. பெண்கள் பொது வெளியில் செல்ல வேண்டியிருந்தால் அவர்களின் முகம் முதல் கால் வரை தங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உள்ள பர்தா உடை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைவர் தலிபான் தலைவருமான ஹிபத்துல்லா அகுந்த்சாடா உத்தரவிட்டார். மேலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் முடங்கினர். அதே நேரத்தில் ஏற்கனவே அரசு பணியில் இருந்த பெண்கள் தங்களின் வேலைகளுக்கு திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெண்களின் கல்வியை தொடர பள்ளிகளை திறக்க கோரி பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி என் உரிமை பள்ளிகளை மீண்டும் திற போன்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகளுக்கான அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை விடுத்த கோரிக்கையை தலிபான்கள் நிராகரித்தனர்.