இங்கிலாந்து சொகுசு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து..!! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை..!

இங்கிலாந்தில் 85 அடி உள்ள சுமார் 7.5 மில்லியன் டாலர் மதிப்புடைய சொகுசு கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து யுனைடெட் கிங்டமில் உள்ள டெவோன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொகுசு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததால் இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. 

இந்த சொகுசு கப்பலில் எட்டு ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக இருந்ததே தீ விபத்திற்கான காரணம் என தீயணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த சொகுசு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருட்டு நிலை உருவாகியுள்ளது.

UK: Massive fire breaks out at multi-million-dollar luxury superyacht,  video goes viral - World News

மேலும் அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் அருகாமையில் உள்ள பகுதி மக்கள் சிறிது நேரம் வெளியேறுமாறு டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என டெவோன் துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் இது வர்த்தக ரீதியாகவும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஏற்றுமதி தடைபட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *