கோவில்களே மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளது – கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றச்சாட்டு

தற்போது இந்தியாவில் மிக பெரிய சர்ச்சையாக போவது மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்தது என்பதே அதற்கு பல தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா முகலாயர் ஆட்சி காலத்தில் பல  ஆயிரம் கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டது என கருத்து  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா ஷிமோகாவில் பேசுகையில் மங்களுரு ஜும்மா மசூதியை புனரமைக்கும் போது இந்து கோவில் என தெரிய வந்திருக்கிறது. அதை சட்ட ரீதியாக மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்க செயல் உள்ளது. 

ஞானவாபி மசூதி அந்த காலத்தில் கோயிலாக இருந்ததா?' - விடாது தொடரும் விவாதங்கள்  - BBC News தமிழ்

அதேபோல் ஸ்ரீரங்கப்பட்டினம் ஜாமியா மசூதியில் பல  ஆண்டுகளுக்கு முன்பு இந்து கோயிலாக இருந்தது உள்ளது  அதற்கான ஆதாரமாக   கடவுளின் சிலைகள் அங்கு இருக்கின்றன. எனவே மசூதியில் பூஜை நடத்த இந்துக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பல ஆண்டுகளுக்கு முன் பல கோவில்கள் பெரும்பாலானவை மசூதிகளாக மாற்றப்பட்டன. இதையெல்லாம் மீட்கும் காலம் தற்போது வந்துவிட்டது. எந்தவித சண்டைஇல்லாமல் நீதிமன்ற ஆணையின் பேரில் மீட்டெடுப்போம் என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்தால் கர்நாடகாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *