திடீரென நடுவானில் காணாமல் போன நேபாள விமானம்..!! 22 பயணிகள் நிலை என்ன..?

நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. நேபாள நாட்டில் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணி அளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது காணாமல் போயுள்ளது அங்குள்ள அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த அந்த விமானத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 22 பேர் என நேபாள நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாரா ஏர் நிறுவனத்தில் காலை 9.55க்கு அளவில் Tara Air 9 NAET ட்வின்- என்ஜின் என்ற விமானம் பொகாராவில் இருந்து ஜோம்சாம் செல்லும் பொது இந்த சம்பவம் நடந்துள்ளது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது.
இந்த நிலையில் அந்த விமானம் கடைசியாக தொடர்பில் இருந்த பகுதிக்கு ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு தேடுதல் தேடும் பணி தீவிரப்படுத்த பட்டுள்ளதாக தாரா ஏர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது