இந்தியாவுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம் – இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர் கிரிசலினா ஜோர்ஜீவா சந்தித்தார்.
அப்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப் நிதி உதவி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தாம் தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உதவ வெளிநாட்டு கூட்டமைப்பை அமைப்பதில் உறுப்பு நாடுகள் முன்மொழிந்துள்ளதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சர்வதேச கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்