நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால்  இம்ரான் கான் பதிவில் இருந்து விலகும் ஏற்பட்டது. இதனால்  நாட்டின் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப் முதல் முறையாக பாகிஸ்தான் மக்களுடன் உரையாற்றினார். ஷெபாஸ் ஷெரீப் பேசும் போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ. 30 உயர்த்தப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் நிலைமை குறித்து அவர் பேசுகையில் நாட்டிற்கு மிகப்பெரிய கடனை வைத்ததோடு, பன்னாட்டு நாணய நிதியத்துடன் இம்ரான் கான் அரசு ஏற்படுத்திய கடனும் அதிகம் என  குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்-எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.. பாகிஸ்தானில்  அரங்கேறும் காட்சிகள் | Pakistan new Prime Minister shehbaz sharif,  Opposition parties announce ...

எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் நிதிநிலை அறிக்கையில் ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது இதற்கு முந்தைய இம்ரான் கான் அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *