பாகிஸ்தானில் நிலவும் பதற்றம்..!! என்ன செய்கிறார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்  வெளி நாட்டுடன் இணைந்து சதி செய்துள்ளார் என இம்ரான் கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மறுத்து வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான் பிரதமர் பேரணியில் பங்கேற்றால் கைது செய்ய நேரிடும் என்று இம்ரான் கானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இருந்தபோதிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்தியுள்ளார். இந்த  நிலையில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தை தவிக்க பாகிஸ்தான் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போராடுகின்றனர். மேலும் பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *